/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிகரிக்கும் நாய்கள் தொல்லை அச்சத்தில் கும்மிடி பகுதி மக்கள்
/
அதிகரிக்கும் நாய்கள் தொல்லை அச்சத்தில் கும்மிடி பகுதி மக்கள்
அதிகரிக்கும் நாய்கள் தொல்லை அச்சத்தில் கும்மிடி பகுதி மக்கள்
அதிகரிக்கும் நாய்கள் தொல்லை அச்சத்தில் கும்மிடி பகுதி மக்கள்
ADDED : ஜூலை 28, 2024 02:41 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில், நாய்களின் பெருக்கம் அதிகரித்து விட்டதால், உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புற்றீசல் போல் நாய்களின் பெருக்கம் அதிகரித்து, சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக சுற்றி திரிகின்றன. சாலையின் குறுக்கே நாய்கள் திடீரென வருவதால், அவ்வழியாக, டூ -- வீலரின் கடந்து செல்வோர் விபத்தினை சந்திக்க நேரிடுகிறது.
இறைச்சிக்கடைகள், சாலையோர உணவகங்கள் உள்ள பகுதியில், உணவுக்கு சண்டையிடும் நாய்கள் மத்தியில், பொதுமக்கள் கடந்து செல்ல அஞ்சுகின்றனர்.
குறிப்பாக, அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களை விரட்டும் நாய்கள், நள்ளிரவில் டூ - -வீலரில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்க பாயும் நாய்கள் என, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் இணைந்து அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டூர் ஏரியின் உபரிநீர்
வெளியேற்ற மதகு அமைப்பு
பொன்னேரி, ஜூலை 28-
பொன்னேரி அடுத்த காட்டூர் கிராமத்தில், 362 ஏக்கர் பரப்பில் பாசன ஏரி அமைந்து உள்ளது. ஆரணி ஆற்றில் இருந்து கால்வாய் வழியாக ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது.
ஏரியில் தேங்கும் தண்ணீரை கொண்டு காட்டூர், அபிராமபுரம், கடப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், 1,700 ஏக்கர் பரப்பு விவசாயநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் இந்த ஏரி மற்றும் இதன் அருகில், 252 ஏக்கர் பரப்பில் உள்ள தத்தமஞ்சி ஆகியவற்றை, 62 கோடி ரூபாயில், நீர்தேக்கமாக மாற்றப்பட்டு உள்ளது.
இரு ஏரிகளிலும், 0.35 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில், கரைகள் பலப்படுத்தப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீர் வெளியேற்றுவதற்கு தேவையான இடங்களில், கிணறு மதகளும் அமைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மழையின்போது, இரண்டு ஏரிகளிலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு பயன் படுத்துப் பட்டது காட்டூர் ஏரிக்கு உபரிநீர் வெளி யேறுவதற்கான கலங்கல் பகுதி இல்லை.சுற்றிலும் கரைகளுடன் இந்த ஏரி அமைந்து உள்ளது.
நீர் உள்வாங்கும் பகுதியில் ஷட்டர்கள் உள்ளன. ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியபின், அவை மூடப்படுகின்றன.
ஏரி நிரம்பிய பின்னர், ஆற்றில் இருந்து வரும் மழைநீரை காட்டூர் சியோல் ஓடை வழியாக, அங்குள்ள தடுப்பணைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு நான்கு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஏரி நிரம்பும் வரை, இவை மூடப்பட்டு இருக்கும். ஏரி முழு கொள்ளவை எட்டி இவை திறக்கப்பட்டு சியோல் ஓடைக்கு உபரிநீர் செல்லும் வகையில் அமைந்து உள்ளன. மேலும், ஏரிக்கு மழைநீர் கொண்டு வரும் கால்வாய் பகுதிகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
காட்டூர் நீர்தேக்கப் பகுதியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவ்வப்போது புதிய திட்டமிடல்கள் மேற் கொள்ளப்பட உள்ள தாக அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.