ADDED : மார் 28, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சூர்யா, 23. இவர் மீது, அடிதடி, திருட்டு போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதையடுத்து சூர்யாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., ஸ்ரீநிவாசபெருமாள் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி சூர்யாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

