/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆசிரியர்கள் பற்றாக்குறை பெற்றோர் ஆதங்கம்
/
ஆசிரியர்கள் பற்றாக்குறை பெற்றோர் ஆதங்கம்
ADDED : ஆக 04, 2024 02:09 AM
திருத்தணி:திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் கூட்டம், பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை கலாமணி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தார்.
திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் தீபாரஞ்சனி மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மேலாண்மை குழுவில், உறுப்பினர்கள் தேர்வு செய்வது, பள்ளியின் கட்டமைப்புகள் குறித்து தலைமை ஆசிரியை பேசினார். தொடர்ந்து பெற்றோர், பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பெரும்பாலான பாட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், குழந்தைகளின் கல்வி கேள்வி குறியாக உள்ளது.
ஆசிரியர்கள் ஒழுங்கான முறையில் பாடங்கள் நடத்த வேண்டும். பள்ளியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு தலைமை ஆசிரியை கலாமணி, ''காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்,'' என கூறினார்.