/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பாரில்' பதுக்கி வைத்த மதுபாட்டில் பறிமுதல்
/
'பாரில்' பதுக்கி வைத்த மதுபாட்டில் பறிமுதல்
ADDED : ஏப் 17, 2024 11:31 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே உள்ள மதுக்கூடத்தில், அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிறப்பு பறக்கும் படை திருவள்ளூர் கோட்ட கலால் அலுவலர் கே.பாலாஜி தலைமையில், நேற்று முன்தினம் திடீரென மதுக்கூடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது, மதுக்கூடத்தில் அனுமதியின்றி, 101 பீர் பாட்டில்கள் பதுக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 17,170 ரூபாய்.
'லோக்சபா தேர்தல் என்பதால், மீதமுள்ள மதுக்கூடம் மற்றும் டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்' என, கலால் அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.

