/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கருப்பு கொடியேந்தி போராட்டம் லோக்சபா தேர்தல் புறக்கணிக்க முடிவு
/
கருப்பு கொடியேந்தி போராட்டம் லோக்சபா தேர்தல் புறக்கணிக்க முடிவு
கருப்பு கொடியேந்தி போராட்டம் லோக்சபா தேர்தல் புறக்கணிக்க முடிவு
கருப்பு கொடியேந்தி போராட்டம் லோக்சபா தேர்தல் புறக்கணிக்க முடிவு
ADDED : ஏப் 17, 2024 11:42 PM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில், எல்.அண்டு.டி., கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் மற்றும் எம்.எப்.எப்., ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்த ஒன்பது பேர் மீது காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் இருப்பதாக கூறி, கடந்த 2018ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
குற்ற வழக்குகள் முடிவுற்ற நிலையில், அவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு கேட்டு வருகின்றனர். மேற்கண்ட நிறுவனங்கள் விதிமுறைகளைக் கூறி, மீண்டும் பணியில் சேர்க்க மறுத்தது.
இதையடுத்து, காட்டுப்பள்ளி கிராமத்தினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக கிராமவாசிகள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாகக் அறிவித்துள்ளனர். வருவாய்த் துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
நேற்று, கிராமவாசிகள்வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கண்டன ஆர்ப்பாட்டமும் மேற்கொண்டனர். ஆங்காங்கே விளம்பர பலகைகளை வைத்து, திட்டமிட்டபடி தேர்தல் புறக்கணிப்பு நடைபெறும் என தெரிவித்து உள்ளனர்.
அருகில் உள்ள மற்ற மீனவ கிராமங்களுடன் பேசி, தங்களது போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு வருகின்றனர்.
வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

