ADDED : ஜூன் 21, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
திருத்தணி, ஜூன் 22–
ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் இருந்து, அரசு அனுமதியின்றி லாரிகள் மூலம், திருவள்ளூர் மாவட்டம் வழியாக, சென்னைக்கு மணல் கடத்துவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று திருத்தணி போலீசார், பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நகரியில் இருந்து மணல் கடத்தி வந்த லாரியை, போலீசார் மடக்கி பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
