ADDED : ஜூலை 12, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்து அதன் ஓட்டுனரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், சென்னை, கிண்டியை சேர்ந்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி 25 டன் ஆற்று மணல் கடத்தி வந்த லாரியை பிடித்தனர்.
லாரி மற்றும் அதன் ஓட்டுனரான, ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தை சேர்ந்த திருப்பதி ஹரிகிருஷ்ணா, 35, என்பவரை ஆரம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
