ADDED : ஏப் 14, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார், 51. லாரி டிரைவர். நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின், சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலைக்கு எரிவாயு டேங்கர் லாரியை ஓட்டி சென்றார்.
மதிய உணவிற்கு பின், அங்குள்ள அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். மாலையில், நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

