நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே, ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி, 51. லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு, ஜெயபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இறக்கினார்.
பின் லாரியிலேயே மயங்கிய நிலையில் இருந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிகிச்சைக்காக, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்துபோலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

