/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இளம்பெண்ணுக்கு 'லவ் டார்ச்சர்' வாலிபருக்கு வலை
/
இளம்பெண்ணுக்கு 'லவ் டார்ச்சர்' வாலிபருக்கு வலை
ADDED : ஆக 10, 2024 11:01 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் பகுதியை சேர்ந்த 18 வயது பெண். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 20. இவர், பெண்ணை பின் தொடர்ந்து, காதலிப்பதாக கூறியுள்ளார். பெண் மறுப்பு தெரிவித்து உள்ளார். ஆனாலும், தொடர்ந்து மணிகண்டன் பெண்ணிடம் தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். நேற்று முன்தினம் அந்த பெண் அங்குள்ள அங்கன்வாடி மையம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, மணிகண்டன் தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி உள்ளார்.
பெண், தன் தந்தைக்கு தகவல் கொடுத்தார். தந்தை மணிகண்டனை கண்டித்தார். ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினார்.
காயம் அடைந்த பெண்ணின் தந்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பென்னலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.