தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் பெரியகரும்பூரில் பணிகள் பாதிப்பு

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் பெரியகரும்பூரில் பணிகள் பாதிப்பு

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் பெரியகரும்பூரில் பணிகள் பாதிப்பு


ADDED : மே 17, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 04:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னேரி: பெரியகரும்பூரில், விளைநிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பொன்னேரி அடுத்த பெரியகரும்பூர் கிராமத்தில் உள்ள விவசாய மோட்டார்களுக்கு, மெதுார் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளன.

இதனால், டிராக்டர்களை கொண்டு உழவு செய்யும் போதும், அறுவடையின் போதும் மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு, கட்டைகளை கொண்டு மின்கம்பிகளை உயர்த்தி, பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் இன்னலுக்கும், அச்சத்திற்கும் ஆளாகின்றனர்.

தற்போது, சொர்ணவாரி பருவத்திற்கு தயாராக வேண்டிய நிலையில், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால், உழவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். மின்வாரியத்திடம் பலமுறை தெரிவித்தும், கண்டுகொள்ளாமல் இருப்பதாக விவசாயிகள் அதிருப் தெரிவிக்கின்றனர்.

எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உடனே சரிசெய்து தரும்படி, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us