/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெல் கொள்முதலில் முறைகேடு: எச்சரிக்கை
/
நெல் கொள்முதலில் முறைகேடு: எச்சரிக்கை
ADDED : மே 07, 2024 09:26 PM
திருவள்ளூர்:நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர், வெளிவியாபாரிகள் குறுக்கிட்டால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், நவரை பருவ நெல் கொள்முதல் செய்யும் பணி துவங்கி உள்ளது. 60 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், இதுவரை 2435 விவசாயிகளிடமிருந்து 14.82 ஆயிரம் கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் நெல் 2310, பொது ரகம் 2,265 ரூபாய்க்கு விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் எழும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சம்மந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த ஒரு விவசாயியும் தன்னுடைய அடங்கல் சான்றிதழை இடைத்தரகர் மற்றும் வெளி வியாபாரிகளிடம் வழங்கினால் அந்த விவசாயிக்கு இரண்டு வருடங்களுக்கு நேரடி நெல்
கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்படும். தலையீடு செய்யும் இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

