/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர் கைது
/
பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர் கைது
ADDED : ஜூன் 15, 2024 09:09 PM
திருத்தணி:திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா, 40, தனியார் பேருந்து ஓட்டுனர் ஆர்.கே.பேட்டை ராஜநகரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன், 31. தனியார் பேருந்து நடத்துனர்.
இருவரும் திருத்தணி- ஸ்ரீபெரும்புதுார் செல்லும் தனியார் பேருந்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை, 3:30 மணிக்கு தனியார் பேருந்து திருவள்ளூர் இருந்து திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது.
அப்போது பேருந்தில் குடிபோதையில் இருந்த திருத்தணி அனுமந்தாபுரம் பகுதியை சேர்ந்த பிரேம், 26. ஓட்டுனர் பிரசன்னாவிடம் தகராறு செய்தார்.
இதையடுத்து நடத்துனர், குமரேசன், வீண் தகராறு வேண்டாம் என போதையில் இருந்த பிரேம்மிடம் கூறிய போது, ஆத்திரமடைந்து, நடத்துனர், ஓட்டுனர் மீது தாக்கிார்.
இதில் நடத்துனர் குமரேசன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிரசன்னாவுக்கும் லோசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் பிரேமை கைது செய்தனர்.