/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிதி நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
/
நிதி நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
ADDED : மே 05, 2024 11:13 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27. இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவரிடம் திருவள்ளூர் அடுத்த பெரிய எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வம், 39 என்பவர் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்த அஜீத்குமார் உங்களுக்கு கடன் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செல்வம் அஜீத்குமாரை லோன் குறித்து பேசவேண்டுமென கூறி அழைத்ததன் பேரில் கடந்த 3 ம் தேதி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்வம், அஜீத்குமாரை கீழே தள்ளி கம்பியால் தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.