/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது
/
ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது
ADDED : பிப் 26, 2025 07:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 26 வயது இளம்பெண் ஒருவர், பொன்னேரி அடுத்த, சின்னகாவனம் கிராமத்தைச் சேர்ந்த நவீன், 33, என்பவரை, நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
திருமண செய்து கொள்வதாக காதலன் தெரிவித்ததன் பேரில், அவருடன் பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமண செய்ய மறுத்த நவீன் மீது, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், இளம்பெண் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், நவீனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

