/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறந்த மகளிர் குழுவிற்கு 'மணிமேகலை' விருது
/
சிறந்த மகளிர் குழுவிற்கு 'மணிமேகலை' விருது
ADDED : மார் 01, 2025 11:56 PM
திருவள்ளூர், திருவள்ளுர் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 'மணிமேகலை' விருதை கலெக்டர் வழங்கினார்.
திருவள்ளுர் மாவட்டத்தில், மாநில நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மணிமேகலை விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2022 - -23 மற்றும் 2023 - 24ம் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட கூட்டமைப்புகளுக்கு, விருது வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, தேர்வு செய்யப்பட்ட மகளிர் குழுவினருக்கு, விருது மற்றும் காசோலை வழங்கினார்.
பின், நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
அதில், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முதல்வரின் காலை உணவு திட்டம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை, 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வரும் விபரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், மகளிர் திட்ட அலுவலர் செல்வராணி, உதவி திட்ட அலுவலர்கள் கிறிஸ்டி, அமல்ராஜ், சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.