/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண்ணுார் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
/
மண்ணுார் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
ADDED : ஆக 16, 2024 10:36 PM
கடம்பத்துார்:
கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் இயங்கி வந்த உதவி மின் பொறியாளர் மண்ணுார் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பொன். அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி சுவாதி நகரில் வாடகை கட்டடத்தில் மண்ணுார் உதவி மின் பொறியாளர் இயக்குனர் மற்றும் பராமரிப்பு அலுவலகம் இயங்கி வந்தது.
இந்த அலுவலகம் வரும் 19ம் தேதி முதல் வயலுார் சாலையில் உள்ள பிளாட் எண்: 188 ல் உள்ள என்.டிரி., என்ற வாடகை கட்டடத்தில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. மின் நுகர்வோர்கள் புதிய அலுவலக முகவரியில் அணுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.