ADDED : ஜூன் 11, 2024 05:21 AM

கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
பின் அவர் பேசியதாவது :
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவங்கியுள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும்.
நம் மாவட்டத்தில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 200 கால்நடைகள் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்தவையாக கணக்கிடப்பட்டு தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதில் கால்நடை வளர்ப்போர் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து 5 பயனாளிகளுக்கு தீவன விதைகளும், தாது உப்பு கலவைகளும் கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் பாலகிருஷ்ணன், திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன், நுங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சானுார் மல்லாவரத்தில் அச்சுறுத்தும் குடிநீர் தொட்டி
ஆர்.கே.பேட்டை,ஜூன் 11-
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சானுார் மல்லாவரம் கிராமத்தின் கிழக்கு பகுதியில் பொது குளம் உள்ளது. குளத்தை ஒட்டி, அங்கன்வாடி மையம், வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி நுாலகம், ரேஷன் கடை, சுகாதார வளாகம் என, அனைத்து பொது கட்டடங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
இந்த வளாகத்தின் நடுவே, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. தற்போது தொட்டி பழுதடைந்துள்ளதால், மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படாமல், நேரடியாக ஆழ்துளை கிணற்றில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தண்ணீர் அழுத்தம் குறைவாக உள்ளதால், அனைத்து வீடுகளுக் கும் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், பகுதிவாசிகள் அவதிப் பட்டு வருகின்றனர்.
அங்கன்வாடிமையம் எதிரே இடிந்து விழும் நிலையில்உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியால், பகுதி வாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
l கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்டது வெண்மனம்புதுார் கிராமம். இப்பகுதி வாசிகள் பயன்பாட்டிற் காக விடையூர் செல்லும் சாலை யோரம் கடந்த20 ஆண்டுகளுக்கு முன், 60,000 லிட் டர் கொள்ளளவுகொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப் பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த குடிநீர் தொட்டி கடந்த 2012-13ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் 48,500 ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்பின், கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப் படாததால், புதருக்குள் மாயமாகி வருகிறது.
மேலும் குடிநீர் தொட்டி குப்பை நிறைந்து காணப்படுவதால், பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றியுள்ள புதர்களை அகற்றி, சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வெண்மனம்புதுார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.