ADDED : மார் 28, 2024 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:சென்னை கான்கேர் பவுண்டேஷன் சார்பில், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் மஹாராஜா அக்ரசேன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.
முகாமில், மார்பக புற்று நோய், மாதவிடாய் பிரச்னை மற்றும் முழு உடல் பரிசோதனைகளை பெண் மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர்.
அத்துடன், சென்னை ராதாத்திரி நேத்ராலயா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாமும் நடக்கிறது. காலை 9:30 - மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும்.

