/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலம் முற்றுகை
/
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலம் முற்றுகை
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலம் முற்றுகை
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலம் முற்றுகை
ADDED : மே 10, 2024 01:06 AM

மீஞ்சூர், மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அத்திப்பட்டு புதுநகர் குடியிருப்புவாசிகள் நேற்று, குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் குடிநீர் தேவை அதிகமாக உள்ள நிலையில், இங்கு போதுமான அளவில் கிடைக்கவில்லை. பிஸ்மில்லா நகர், பகவத்சிங் நகர் ஆகிய இடங்களுக்கு போதிய குடிநீர் வழங்க வேண்டும்.
அதேபோன்று அத்திப்பட்டு புதுநகர் அருகே உள்ள தாங்கல் பகுதியில் கட்டிய சுற்றுசுவர் இடிந்து விழுந்ததால், அதை நில அளவீடு செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறினர்.
அங்கு வந்த பொன்னேரி காங்., எம்.எல்.ஏ., துரைசந்திரசேகரிடமும் முறையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன், மேற்கண்ட பகுதிகளில் இரண்டு குடிநீர் மேல்நிலை நீர்த்தக்க தொட்டி அமைக்கும் பணி தொடங்கப்படும் எனவும், தாங்கல் பகுதியில் விரைவில் நில அளவை செய்து சுற்றுசுவர் அமைக்கும் பணி நடைபெறும் எனவும் உறுதியளித்தனர். அதையடுத்து குடியிருப்புவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அத்திப்பட்டு புதுநகர் குடியிருப்புவாசிகள் கடந்த மூன்று தினங்களாக மின்தடை, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்துசாலை மறியல், பி.டி.ஓ.,அலுவலகம் முற்றுகை என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
அதிகாரிகள் அங்கு நேரில் ஆய்வு செய்து, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.