/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையோரம் 'மெகா' பள்ளம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
/
நெடுஞ்சாலையோரம் 'மெகா' பள்ளம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
நெடுஞ்சாலையோரம் 'மெகா' பள்ளம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
நெடுஞ்சாலையோரம் 'மெகா' பள்ளம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
ADDED : மே 23, 2024 11:46 PM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த ெஜகன்னாதபுரத்தில், மேட்டுப்பாளையம் - அழிஞ்சிவாக்கம் மாநில நெடுஞ்சாலையின் அருகில், மொபைல் டவர் அமைப்பதற்காக, 10 அடி ஆழத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.
அங்கு டவர் அமைப்பதற்கு, கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் கைவிடப்பட்டது. இந்நிலையில், டவர் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருக்கிறது.
மழைக்காலங்களில், பள்ளத்தில் மழைநீர் தேங்குவதால், கால்நடைகள், வாகன ஓட்டிகள் அதில் தவறி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பள்ளம் அமைந்துள்ள பகுதியில் எதிரெதிரே கனரக வாகனங்கள் கடக்கும்போது, அவை தடுமாற்றம் அடைகின்றன. வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துகள் நேரிடும் அபாயமும் உள்ளது.
பள்ளி வளாகம் அமைந்துள்ள பகுதியை குறிக்கும் வகையில், அங்கு வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையும் பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனால், வாகனங்களும் அசுர வேகத்தில் பயணித்து, மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.
எனவே, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தை மூட, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.