/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'ஆன்லைன்' கட்டண வசூலில் கோளாறு மெட்ரோ ரயில் பயணியர் அவதி
/
'ஆன்லைன்' கட்டண வசூலில் கோளாறு மெட்ரோ ரயில் பயணியர் அவதி
'ஆன்லைன்' கட்டண வசூலில் கோளாறு மெட்ரோ ரயில் பயணியர் அவதி
'ஆன்லைன்' கட்டண வசூலில் கோளாறு மெட்ரோ ரயில் பயணியர் அவதி
ADDED : ஜூலை 21, 2024 06:36 AM
சென்னை: சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிகாலை 5:00 மணி முதல் இரவு 11:30 மணி வரை, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பயணியருக்கு பெரிதும் உபயோகமாக இருக்கிறது. பயணியர் வசதிக்கேற்ப, 'ஆன்லைன்' வாயிலாக டிக்கெட் பெறும் வசதி இருக்கிறது.
ஆனால், சமீபகாலமாக ஆன்லைன் கட்டண முறையில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது. இதனால், மெட்ரோ ரயில் நிலையங்களில், ஸ்டேடிக் 'கியூ.ஆர்.,' குறியீடு மற்றும் 'வாட்ஸாப், ஜி.பே., பேடிஎம்.,' வாயிலாக டிக்கெட் பெறும் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆயிரம் விளக்கு, விமான நிலையம், ஆலந்துார், கிண்டி, சென்ட்ரல் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது.
இரவு 8:00 மணிக்கு மேல் இந்த பிரச்னை நீடிப்பதால், கையில் பணம் இல்லாத பயணியர், திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.
மெட்ரோ ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:
நெரிசல் இன்றி விரைவாக பயணிக்க, மெட்ரோ ரயில் மிகவும் வசதியாக இருக்கிறது. ஆனால், 'கியூ.ஆர்.,' குறியீடு டிக்கெட் எடுக்கும் வசதியில், தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது, சிரமமாக இருக்கிறது.
கியூ.ஆர்., குறியீடை 'ஸ்கேன்' செய்தால், அடுத்த வலைபக்கத்திற்கு செல்ல முடியாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த கோளாறு சில நிமிடங்கள் தான் என்றாலும், கவுன்டர்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை நம்பி வரும் பயணியர், ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, இரவில் பேருந்து வசதி இல்லாத நிலையில், மெட்ரோவை நம்பி வரும் பயணியருக்கு பெரும் சங்கடம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.