/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரமான உணவு வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்
/
தரமான உணவு வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்
ADDED : ஆக 14, 2024 11:07 PM

திருத்தணி:சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த முருக்கம்பட்டில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் தமிழ்நாடு ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாகா சென்னை -- திருப்பதி ஆன்மிக சுற்றுலாவிற்கு, 20 பேருந்துகள் மூலம் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்த பக்தர்களுக்கு, தமிழ்நாடு ஹோட்டலில் காலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணியர் மற்றும் பக்தர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என, சுற்றுலாத் துறை அமைச்சர்ராமச்சந்திரன், நேற்று காலை பார்வையிட்டார்.
அதன்பின், பக்தர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் போதிய வசதிகள் உள்ளதா எனவும் அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும், ஹோட்டல் ஊழியர்களிடம் 'பக்தர்கள் மற்றும் பயணியருக்கு தரமான உணவு வழங்க வேண்டும்' என, அறிவுறுத்தினார்.