/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு
/
திருவள்ளூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு
திருவள்ளூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு
திருவள்ளூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூலை 31, 2024 11:52 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாமில் பயிற்சி மேற்கொண்ட இளைஞர்களிடம் பேசுகையில், ''அரசு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என, கிராமப்புற இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
''அவர்களுக்காக, தமிழக அரசின் பல்வேறு போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்காக, சிறப்பு இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
''இதை இளைஞர்கள் பயன்படுத்தி, நன்றாக படித்து அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, நல்ல நிலைக்கு உயர வேண்டும்,'' என்றார்.
இதில், மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர் சுந்தரவல்லி, கலெக்டர் பிரபுசங்கர், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.