/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு
/
சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 13, 2024 12:26 AM
திருவள்ளூர்:சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் கடன் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில், அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஆண், பெண்களுக்கு 30 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் வட்டியில், 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். சிறுபான்மையின மாணவ- - மாணவியருக்கு, அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய், 3 சதவீத வட்டியிலும் வழங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர், கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.