/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணவூரில் சாலை படுமோசம் 100க்கும் மேற்பட்டோர் காயம்
/
மணவூரில் சாலை படுமோசம் 100க்கும் மேற்பட்டோர் காயம்
மணவூரில் சாலை படுமோசம் 100க்கும் மேற்பட்டோர் காயம்
மணவூரில் சாலை படுமோசம் 100க்கும் மேற்பட்டோர் காயம்
ADDED : ஜூன் 04, 2024 06:26 AM

மணவூர், : திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ரயில் நிலையத்தில் இருந்து, - சின்னம்மாபேட்டை வரையிலான தார்ச்சாலை, 4 கி.மீ., துாரம் உடையது. இச்சாலை வழியாக தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் திருவள்ளூர், கடம்பத்துார், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டு களாக மணவூர் ரயில் நிலையத்தில் இருந்து தொழுதாவூர் வரையிலான 3 கி.மீ., சாலை, மிகவும் சேதமடைந்து ஜல்லிக் கற்கள் பெயர்ந்து மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. மேலும், சேதம்அடைந்த இச்சாலையால், பல்வேறு விபத்துகளில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகள் சென்று வர லாயக்கற்ற நிலையில் உள்ள தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.