/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் விளக்கு இல்லாத சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
/
மின் விளக்கு இல்லாத சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
மின் விளக்கு இல்லாத சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
மின் விளக்கு இல்லாத சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : மே 07, 2024 06:54 AM

திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை. 16 கி.மீ., தூரம் உடையது. இந்த சாலையில் முத்துக்கொண்டாபுரம், அத்திப்பட்டு, திருவாலங்காடு, புளியங்குண்டா, சின்னம்மாபேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி செல்லும் வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும் 30,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலை வழியே சென்று வருகின்றன. இரவு 9:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலை வழியாக செல்லும்.
இந்நிலையில், இங்கு புளியங்குண்டா --- முத்துக்கொண்டாபுரம் வரையிலான 6 கி.மீ., சாலையில் பல இடங்களில் மின்கம்பம் இன்றி உள்ளது.
மேலும், பல இடங்களில் மின்கம்பம் இருந்தும் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இதை பயன்படுத்தி வழிப்பறி, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இங்கு காப்பு காடு உள்ளதால், இரவில் காட்டு பன்றி, மான் போன்ற விலங்குகள் சாலையில் நின்று கொண்டு பயமுறுத்துவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலையில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.