/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் சிதறும் சாம்பல் கழிவுகள் புழுதியில் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
சாலையில் சிதறும் சாம்பல் கழிவுகள் புழுதியில் வாகன ஓட்டிகள் தவிப்பு
சாலையில் சிதறும் சாம்பல் கழிவுகள் புழுதியில் வாகன ஓட்டிகள் தவிப்பு
சாலையில் சிதறும் சாம்பல் கழிவுகள் புழுதியில் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : பிப் 10, 2025 02:37 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள், செப்பாக்கம் கிராமத்தில் குவிக்கப்படுகின்றன.
அங்கிருந்து டிப்பர் லாரிகளில், சாலை மற்றும் பல்வேறு கட்டுமான பணிகளுக்கு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக மலைபோல் குவித்து கொண்டு, தார்ப்பாய் மூடாமல் செல்லும்போது அவை சாலைகளில் சிதறுகின்றன.
நேற்று முன்தினம், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், டிப்பர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட சாம்பல்,கழிவுகள், சாலையில் ஆங்காங்கே குவியல் குவியலாக கொட்டியது.
சாம்பல் கழிவுகள் காற்றில் பறந்து, சிறிது நேரத்தில், அப்பகுதி முழுதும் புழுதாகியாக மாறியது. இதனால் வல்லுார் - அத்திப்பட்டு புதுநகர் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது போன்ற தொடர் சம்பவங்களால், கார், பைக்குகளில் பயணிப்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மூச்சு திணறல், இருமல் உள்ளிட்ட சுகாதார பாதிப்புகளும் ஏற்படுகிறது. கண்ணில் துாசி விழும்போது நிலை தடுமாறி, சிறு சிறு விபத்துக்களிலும் சிக்குகின்றனர்.
அதிக சுமையுடன், சாம்பல் கழிவுகளை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

