/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முட்டுக்காடு மிதவை உணவகம் தயார் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு திறப்பு
/
முட்டுக்காடு மிதவை உணவகம் தயார் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு திறப்பு
முட்டுக்காடு மிதவை உணவகம் தயார் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு திறப்பு
முட்டுக்காடு மிதவை உணவகம் தயார் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : மே 07, 2024 06:53 AM

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில், இன்னும் ஒரு மாதத்திற்குள் மிதவை படகு உணவகம் திறக்கப்பட உள்ளது.
சென்னையில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக இயக்கப்படும் படகு இல்லத்தில், சுற்றுலா பயணியர் கூடி, மிதவை படகுகள், இயந்திர படகுகள் மற்றும் அதிவேக இயந்திர படகுகளில் சாகசப்பயணம் மேற்கொண்டு மகிழ்கின்றனர்.
மேலும், சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் இரண்டு அடுக்குகளுடன் கூடிய மிதக்கும் உணவக கப்பலை சுற்றுலா துறை தயார் செய்துள்ளது. 60 குதிரை திறனுடைய இயந்திரத்தின் வாயிலாக இயக்கப்படும் இது, இன்னும் ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தமிழகத்தில் உருவான, முதல் மிதவை உணவக கப்பல் என்பதால், சுற்றுலா பயணியரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் முதல்தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணியர் தளத்தில் அமர்ந்து உணவு உண்ணும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், சமையல் அறை, சேமிப்பு அறை, கழிப்பறை, இன்ஜின் அறை ஆகியவை உள்ளன.