/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு ஊழியருக்கு மிரட்டல் நாராயணபுரம் வாலிபர் கைது
/
அரசு ஊழியருக்கு மிரட்டல் நாராயணபுரம் வாலிபர் கைது
ADDED : செப் 01, 2024 11:04 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 56. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 30ம் தேதி இரவு 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் உடன் பணிபுரிந்து வரும் வெற்றிவேல் என்பவருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நாராயணபுரம் சந்திப்பு அருகே சென்றபோது, முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற நாராயணபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார், 32, என்பவர் வழிவிடாமல் சென்று கொண்டிருந்தார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சீனிவாசனை ஆபாசமாக பேசி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், வினோத்குமாரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.