ADDED : ஆக 31, 2024 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகையில் இருந்து எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை, கால்நடை மருந்தகம் அருகே வயல்வெளியில் மின்கம்பத்தின் சிமென்ட் தளம் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தன.
மின்கம்பம் உடைந்து விழும் என்பதால், விவசாயிகள் அச்சமடைந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து திருத்தணி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர் உத்தரவின்படி மின்வாரிய ஊழியர்கள் விவசாய நிலத்தில் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிதாக மின்கம்பம் அமைத்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.