/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காவலர் ரோந்து பணிக்கு புதிய இருசக்கர வாகனங்கள்
/
காவலர் ரோந்து பணிக்கு புதிய இருசக்கர வாகனங்கள்
ADDED : ஜூலை 28, 2024 02:35 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ஆயுதப்படை மைதானத்தில், திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் உள்ள 4 உட்கோட்டத்தில் உள்ள 24 காவல் நிலையங்களுக்கும் அதிநவீன இருசக்கர ரோந்து வாகன பயன்பாட்டை, மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணி மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த இரு சக்கர வாகனத்தில், காவலர்களை எளிதில் தொடர்பு கொள்ள வாக்கிடாக்கி, சைரன் விளக்கு, ஜி.பி.எஸ்., கருவி உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த ரோந்து வாகனம் மூலம் குற்றங்கள் நிகழாமல் கண்காணித்தல், சட்டம் -- ஒழுங்கைப் பராமரித்தல், காவல் துறையின் இலவச தொலைபேசி எண் 100-க்கு வரும் அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
பொது மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துதல், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுமென எஸ்.பி., சீனிவாச பெருமாள் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகுமார், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் தேவநாராயணன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் செந்தில், சந்திரசேகர், பார்த்திபன் பங்கேற்றனர்.