/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
/
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
ADDED : ஜூன் 12, 2024 07:13 PM
திருவள்ளூர்,:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்து, துண்டு பிரசுரம் மற்றும் விளம்பர பதாகை வெளியிட்டார்.
அதன்பின், கலெக்டர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 14 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி கற்க அனுப்பி வைக்க வேண்டும்.
கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி, தொழிலாளர் நல உதவி ஆணையர் நிஷாந்தி - அமலாக்கம், மாவட்ட மேலாளர் - குற்றவியல் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.