தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குறைந்த ஊதியம் வழங்கியதால் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

குறைந்த ஊதியம் வழங்கியதால் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

குறைந்த ஊதியம் வழங்கியதால் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை


ADDED : செப் 09, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணியில், 125 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கியதாக கூறி, பி.டி.ஓ., அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். 

திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சியில், 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ‘வி.பி.ஜி., ராம்ஜி’ திட்டத்தில், 125 நாள் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் வேலை செய்ததற்கான ஊதியம், வங்கி கணக்கில் நேற்று முன்தினம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 30 ரூபாய் வீதம் செலுத்தப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், திருத்தணி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த திருத்தணி பி.டி.ஓ., செல்வி, அவர்களிடம் சமரச பேச்சு நடத்தினார். ‘ஊதிய உயர்வு குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என, வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us