/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடகு கடையில் திருடிய முதியவர் கைது
/
அடகு கடையில் திருடிய முதியவர் கைது
ADDED : செப் 02, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்தவர் சண்முகம், 55; திருத்தணி என்.எஸ்.சி., போஸ் சாலையில் அடகு கடை மற்றும் நகை விற்பனை செய்கிறார்.
நேற்று அதிகாலை, கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 43 கிராம் தங்க நகை, 6 கிலோ வெள்ளி மற்றும் 50,000 ரூபாயை திருடிச் சென்றனர்.
கடைக்காரர் புகாரின்படி, 'சிசிடிவி' காட்சிகளை வைத்து, திருத்தணி போலீசார் விசாரித்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர், சென்னை மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த 'பங்க்' முருகன், 61, என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், திருடு போன பணம், நகை மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.