ADDED : மே 24, 2024 04:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே எல்.ஆர்.மேடு கிராமத்தில் வசித்தவர் முனுசாமி, 63.
இம்மாதம், 21ம் தேதி இரவு, அவரது வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று வந்தது. முனுசாமி அடிக்க முயன்றபோது, பாம்பு அவரை கடித்தது. ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.