ADDED : மே 03, 2024 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல் அடுத்த விநாயகபுரம், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள், 83. இவர், நேற்று காலை 8:00 மணியளவில், புழல் அம்பேத்கர் சிலை எதிரில், தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.
அப்போது, மாதவரத்தில் இருந்து, புழலுக்கு சென்ற மினி லாரி, பெருமாள் மீது மோதியது.
பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.