/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் ரயில் மோதி மூதாட்டி பலி
/
திருத்தணியில் ரயில் மோதி மூதாட்டி பலி
ADDED : ஆக 07, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயம்மாள், 64. இவர் நேற்று முன்தினம் காலை திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பின், திருத்தணி ரயில் நிலையத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டாவது தானியங்கி ரயில்வே கேட்டில் இருந்து தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது ரேணிகுண்டாவில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற விரைவு ரயில் மூதாட்டி மீது மோதியது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.