/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் 27 ல் ஆடிக்கிருத்திகை விழா
/
திருத்தணி கோவிலில் 27 ல் ஆடிக்கிருத்திகை விழா
ADDED : ஜூலை 18, 2024 07:21 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா இம்மாதம், 27 ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஐந்து நாட்கள் வெகு விமர்ச்சையாக நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை தரிசிப்பர்.
இந்நிலையில் விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
கோட்டாட்சியர் க.தீபா தலைமை வகித்தார். கோவில் இணை ஆணையர் பொறுப்பு அருணாச்சலம் வரவேற்றார். திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ் மாறன் முன்னிலை வகித்தார்.
இதில் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் சித்ரா பங்கேற்று, ஆடிக்கிருத்திகை விழா ஏற்பாடுகள் குறித்தும், தற்காலிக பேருந்து நிலையங்கள், சுகாதாரம், குடிநீர், தடையின்றி மின்சாரம், கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரவேண்டும் என அறிவுறுத்தினர். தற்காலிக பேருந்து நிலையம் அமையும் இடங்களை நேரில் சென்று அதிகாரிகள் பார்வையிட்டனர்.