/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரு நாள் இலவச தற்காப்பு பயிற்சி
/
ஒரு நாள் இலவச தற்காப்பு பயிற்சி
ADDED : மார் 05, 2025 11:52 PM
சென்னை, மகளிர் தினத்தை முன்னிட்டு, மந்தைவெளியில் ஒருநாள் இலவச தற்காப்பு பயிற்சியில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகளிர் அகில இந்திய போபூக்காய் இஷுன்ரியு கராத்தே கூட்டமைப்பு மற்றும் ரோட்டரி கிழக்கு ராஜா அண்ணாமலைபுரம் சங்கம் இணைந்து, வரும் 9ம் தேதி, மகளிருக்கு ஒரு நாள் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முகாம், மந்தைவெளி, ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள கராத்தே பள்ளியில், காலை 10:00 மணி முதல் 11:45 மணி வரை நடக்கிறது.
இதில், 10 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் பங்கேற்கலாம். கராத்தே பற்றிய முன் அனுபவம் தேவையில்லை. இலவச முகாமில் பங்கேற்க விரும்புவோர், 98400 18628 என்ற வாட்ஸாப் எண்ணில் பெயர்களை பதிவு செய்யலாம்.