/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் வண்ண ஓவியத்துடன் இரண்டு புதிய பூங்கா திறப்பு
/
திருவள்ளூரில் வண்ண ஓவியத்துடன் இரண்டு புதிய பூங்கா திறப்பு
திருவள்ளூரில் வண்ண ஓவியத்துடன் இரண்டு புதிய பூங்கா திறப்பு
திருவள்ளூரில் வண்ண ஓவியத்துடன் இரண்டு புதிய பூங்கா திறப்பு
ADDED : ஜூலை 17, 2024 12:39 AM

திருவள்ளூர்திருவள்ளூர் நகராட்சியில் சிறுவர் விளையாடும் இடம், நடைபயிற்சி பாதையுடன் அமைக்கப்பட்ட இரண்டு புதிய பூங்காக்கள் திறக்கப்பட்டன.
திருவள்ளூர் நகராட்சி 11வது வார்டு, எம்.ஜி.எம்., நகரில் ஒன்றரை ஏக்கர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 47 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒன்றரை ஏக்கர் புதிய பூங்கா கட்டடப்பட்டுள்ளது.
மேலும், 13வது ஏ.எஸ்.பி., நகரில் மத்திய அரசின் 'அம்ருத்' திட்டத்தில், 33 லட்சம் ரூபாய் பரப்பளவில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர் விளையாடும் வகையில் விளையாட்டு சாதனம், நடைபயிற்சி பாதை பாதுகாவலர் அறை மற்றும் கழிப்பறை வசதியுடன் இந்த பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் திறப்பு விழா நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இரண்டு பூங்காக்களையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.