/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி புதிய காய்கறி மார்க்கெட்டிற்கு கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பு
/
திருத்தணி புதிய காய்கறி மார்க்கெட்டிற்கு கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பு
திருத்தணி புதிய காய்கறி மார்க்கெட்டிற்கு கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பு
திருத்தணி புதிய காய்கறி மார்க்கெட்டிற்கு கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பு
ADDED : மார் 04, 2025 07:32 PM
திருத்தணி:திருத்தணி ம.பொ.சி.சாலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காமாஜர் காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. மார்க்கெட் பழுதடைந்தாலும், போதிய வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
கடந்தாண்டு நகராட்சி நிர்வாகம், பழைய காய்கறி மார்க்கெட்டை இடித்து, 3.02 கோடி ரூபாய் மதிப்பில் நவீன கட்டடம் கட்டுவதற்கு பணிகள் துவக்கப்பட்டன. தற்போது, காய்கறி மார்க்கெட் பணிகள் நிறைவடைந்து, சில நாட்களில் திறக்கப்படவுள்ளது.
புதிய காய்கறி மார்க்கெட்டிற்கு நகராட்சி நிர்வாகம், 'கலைஞர் நுாற்றாண்டு காய்கறி அங்காடி' என பெயர் மாற்றம் செய்து, காய்கறி மார்க்கெட்டில் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட த.மா.கா., தலைவர் வெங்கடேசன், கட்சி நிர்வாகிகளுடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, ஆணையர் பாலசுப்ரமணியத்திடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், 'காய்கறி மார்க்கெட்டிற்கு, பழைய பெயரையே சூட்ட வேண்டும், காந்தி சிலையையும் காய்கறி மார்க்கெட் பகுதியில் வைக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி, தா.மா.கா., கட்சி தலைவர் ஜி.கே.வாசனும், தன் கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
★ அதேபோல், பா.ஜ., - காங்., - பா.ம.க., கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன் உட்பட நகர வியாபாரிகள் சங்கத்தினரும், 50 ஆண்டுகள் மேலாக இருந்த காமராஜர் காய்கறி மார்க்கெட் பெயரே தொடர வேண்டும். பெயர் மாற்றுவதற்கு கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.