/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
/
ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : செப் 14, 2024 08:19 PM
திருவள்ளூர்:ஊரக வளர்ச்சி திட்ட வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்குமாறு, கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள் மற்றும் பயனாளி தேர்வு, புனரமைக்கப்படும் வீடு எண்ணிக்கை, பழங்குடியினர் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின் அவர் கூறியதாவது:
வீடு கட்டும் பயனாளிகளுக்கு கட்டுமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும், வழங்கப்பட்ட சிமென்ட் குறித்து உரிய பதிவுகள் முறையாக கையாள வேண்டும்.
நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், பள்ளி சுற்றுச்சுவர், ரேஷன் கடை கட்டுமான பணி, வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், ஊரக விளையாட்டு மையம் கட்டுவதற்கான பணிகளுக்கு உடனடியாக நிர்வாக அனுமதி பெற வேண்டும்.
சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நிலுவையில் உள்ள பொது நுாலகம், 'ஸ்மார்ட்' வகுப்பறை உள்ளிட்ட ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில் குமார், ஊராட்சி உதவி இயக்குனர் பரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.