/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிம்ம வாகனத்தில் பக்தோசித பெருமாள்
/
சிம்ம வாகனத்தில் பக்தோசித பெருமாள்
ADDED : ஏப் 17, 2024 11:36 PM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி, கோவில் வளாகம் மற்றும் மாடவீதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பெருமாள் வீதியுலா எழுந்தருள்கிறார்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் சிம்ம வாகனத்தில் உற்சவர் பக்தோசித பெருமாள், மாடவீதியில் வலம் வந்தார். நேற்று காலை அம்ச வானகத்திலும், இரவு 8:00 மணிக்கு ஹேமகோடி விமானத்தில் எழுந்தருளினார்.
பிரம்மோற்சவத்தின் சிறப்புமிக்க கருட சேவை, நாளை நள்ளிரவு 12:00 மணிக்கு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 21ம் தேதி தேரில் உற்சவர் வலம் வர உள்ளார்.

