/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆந்திராவில் பனங்‛'கள்' சீசன் சென்னை வாசிகள் படையெடுப்பு
/
ஆந்திராவில் பனங்‛'கள்' சீசன் சென்னை வாசிகள் படையெடுப்பு
ஆந்திராவில் பனங்‛'கள்' சீசன் சென்னை வாசிகள் படையெடுப்பு
ஆந்திராவில் பனங்‛'கள்' சீசன் சென்னை வாசிகள் படையெடுப்பு
ADDED : மார் 02, 2025 11:57 PM

கும்மிடிப்பூண்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த, 'கள்' பிரியர்களுக்காக, தமிழக எல்லையோர ஆந்திர பகுதிகளில், பனைமரங்களில் கலயங்கள் கட்டி, 'கள்' இறக்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏராளமானோர் ஆர்வமுடன் 'கள்' பருக படையெடுத்து வருகின்றனர்.
சதமிழகத்தில் 'கள்' விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆந்திராவில், 'கள்' விற்பனை செய்வோர், அம்மாநில அரசிடம் விற்பனை உரிமம் பெறுகின்றனர். ஆண்டுதோறும், பிப்ரவரி மாத இறுதியில் துவங்கி, ஜூன் மாதம் வரை பனை மரங்களில் கலயங்கள் கட்டி 'கள்' இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
கோடைக்காலங்களில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தோர், அதிகளவில் ஆந்திரா நோக்கி படையெடுப்பது வாடிக்கை. இதனால், கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லைக்கு உட்பட்ட பனங்காடு, பூண்டி, காரூர், வெங்கடாதிரிபாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களில், 'கள்' விற்பனை முழு வீச்சில் நடைபெறும்.
தற்போது, கோடை வெயில் துவங்கியதால், இக்கிராம பகுதிகளில், பனைமர கிளைகளை கழிப்பது, பாளை சீவுவது, கலயம் கட்டுவது, 'கள்' இறக்குவது என, பிசியாக காணப்படுகின்றனர். தமிழக 'கள்' பிரியர்கள் அளித்து வரும் வரவேற்பு காரணமாக, தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திர பகுதியில், நுாற்றுக்கணக்கானோர் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, ஆந்திர பனங்'கள்' இறக்குவோர் மற்றும் விற்பனை செய்வோர் கூறுகையில், 'அடுத்த நான்கு மாதங்களுக்கு, தமிழக 'கள்' பிரியர்களை நம்பியே எங்கள் வாழ்வாதாரம் இருக்கும்' என, தெரிவித்தனர்.