/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி மந்தம் 'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய அவலம்

ADDED : மே 09, 2024 01:23 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகர் பகுதியில் இருந்த ஊராட்சி அலுவலகம் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது.
இதையடுத்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, கடந்த 2020 ஜனவரி மாதம் துவங்கி நடந்து வருகிறது.
இந்த பணிகளை மூன்று மாதத்திற்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக ஒன்றிய பொறியாளர் தெரிவித்திருந்தார். ஆனால், பணிகள் துவங்கி நான்கு ஆண்டுகளாகியும், ஊராட்சி அலுவலகம் பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால், தற்போது, பார்க்கிங் ஏரியாவாக மாறியுள்ளது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல், அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.