/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சங்கு ஒலிக்கும் இயந்திரம் பழுது நேரம் அறியாமல் பகுதியினர் தவிப்பு
/
சங்கு ஒலிக்கும் இயந்திரம் பழுது நேரம் அறியாமல் பகுதியினர் தவிப்பு
சங்கு ஒலிக்கும் இயந்திரம் பழுது நேரம் அறியாமல் பகுதியினர் தவிப்பு
சங்கு ஒலிக்கும் இயந்திரம் பழுது நேரம் அறியாமல் பகுதியினர் தவிப்பு
ADDED : ஆக 31, 2024 11:10 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம் தினசரி அங்காடி எதிரே சங்கு ஒலிக்கும் டவர் ஒன்று உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அந்த கோபுரம் அமைக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் அதை பராமரித்து வருகின்றனர்.
நகர மக்களுக்கு நேரத்தை தெரியப்படுத்தும் விதமாக, தினசரி அதிகாலை 5:00 மணி, காலை 8:00 மணி, மதியம் 1:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 8:00 மணி என ஐந்து முறை சங்கு ஒலிக்கும்.
அந்த சத்தத்தை வைத்து கும்மிடிப்பூண்டி நகர மக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சங்கு ஒலிக்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், சங்கு ஒலிக்காமல் உள்ளது.
இதனால், சங்கு சத்தமின்றி, நேரத்தை கடைபிடிக்க முடியாமல், ஏதோ ஒன்றை இழந்ததை போன்று உணருவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சங்கு ஒலிக்கும் இயந்திரத்தில் பழுது நீக்கம் செய்து மீண்டும் பழையபடி சங்கு ஒலிக்கும் சத்தத்தை கேட்க வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.