/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மருத்துவமனையில் குடிநீர் வசதி நோயாளிகள் மகிழ்ச்சி
/
மருத்துவமனையில் குடிநீர் வசதி நோயாளிகள் மகிழ்ச்சி
ADDED : மே 01, 2024 01:25 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நாள்தோறும் 3,000 பேர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 700க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைக்காக, உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மகப்பேறு மருத்துவம், பச்சிளம் குழந்தை பராமரிப்பு என, 350 பேர் வரை உள்நோயாளியாக உள்ளனர். இவர்களுக்கும், இவர்களுடன் வருவோருக்கும் மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் வசதி இல்லை.
இதனால், குடிநீருக்காக கடும் சிரமப்பட்டு வந்தனர். சிலர், கடைகளில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையின், பிரசவ வார்டு அருகில், புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தம் அருகில், நகராட்சி சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.