/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
100 நாள் வேலை சம்பளம் கேட்டு பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
/
100 நாள் வேலை சம்பளம் கேட்டு பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
100 நாள் வேலை சம்பளம் கேட்டு பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
100 நாள் வேலை சம்பளம் கேட்டு பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : மார் 15, 2025 02:23 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், பணியாற்றி வரும் கிராமவாசிகளுக்கு, சம்பள பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடனடியாக ஆறு மாத சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி, நேற்று 200க்கும் மேற்பட்ட பெண்கள், கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தலைமையில், அலுவலக நுழைவாயில் முன், கிராம பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனடியாக, சம்பள பாக்கி வழங்க வேண்டும். 100 நாள் வேலை வருகை பதிவேடு முறைகேடுகளை தடுக்க வேண்டும்.
மேலும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும். புதுகும்மிடிப்பூண்டி மற்றும் பெத்திக்குப்பம் ஊராட்சியை, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதை தொடர்ந்து, கோரிக்கை மீதான மனுவை, பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், கிராம பெண்கள் கலைந்து சென்றனர்.