/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்
/
இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்
இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்
இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்
ADDED : ஜூலை 02, 2024 07:01 AM
பொன்னேரி: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வியாபாரிகள் வீசும், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை உண்பதற்காக பஜார் பகுதியில் சுற்றித்திரிகின்றன. இதனால் கடைகளுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக, நிர்வாகத்திற்கு வந்த தொடர் புகார்களை அடுத்து, நகராட்சி சுகாதாரத்துறையினர் கடந்த இரு தினங்களாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டிகளில் அடைத்த வருகின்றனர்.
இதுவரை, ஒன்பது பசு மாடுகள், ஐந்து கன்றுகள் பிடிக்கப்பட்டன. அவற்றை தேடி வந்த உரிமையாளர்களிடம், 34, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டன.
இது குறித்து நகராட்சி கமிஷனர் எஸ்.கோபிநாத் கூறியதாவது:
பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்ட மாடுகள் இரண்டாவது முறை பிடிபட்டால் மீண்டும் அபராதம் விதிக்கப்படும்.
மூன்றாவது முறை பிடிப்பட்டால் புளூகிராசில் ஒப்படைக்கப்படும்.
மாடு உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை சாலைகளில் விடுவதை தவிர்த்து நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.